Cricket WorldCup 2019

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், மானேஜர் சுனில் சுப்பிரமணியன் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை போட்டியுடன் முடிவடைந்தது.


வெஸ்ட்இண்டீஸ் ஆட்டத்தில் போட்டியில் இந்திய அணி ஆகஸ்டு 3-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை விளையாடவுள்ளது. இந்த போட்டி தொடருக்காக தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாக மானேஜர் ஆகியோரின் பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், டிரெய்னர், நிர்வாக மானேஜர் ஆகிய பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியின் தலைமை பயிற்சியாளராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஐ.பி.எல். மற்றும் அதற்கு இணையான லீக் போட்டிக்கான அணியின் தலைமை பயிற்சியாளராகவோ, முதல் தர அல்லது தேசிய ‘ஏ’ அணியின் தலைமை பயிற்சியாளராகவோ குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருந்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மேற்கண்ட தகுதிகளில் ஒரே ஒரு மாற்றமாக குறைந்தது 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

Related posts

இந்திய அணியின் தோல்விக்கு இந்த ஜெர்சி தான் காரணம் –மெகபூபா முப்தி

TamilSportsNews

இறுதிப்போட்டி வாய்ப்பு இன்ப அதிர்ச்சியே- இங்கிலாந்து கேப்டன்

TamilSportsNews

கனவா? நனவா? என்னும் குழப்பத்தில் ஹர்திக் பாண்ட்யா

TamilSportsNews

Leave a Comment