Cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா

     இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 18672 ஒட்டங்கள் எடுத்துள்ளார். அவற்றோடு 55 சதங்கள் மற்றும் 88 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும் ஆம்லா டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சார்பில் 300 ஒட்டங்களை கடந்த ஒரே வீரர் ஹாசிம் ஆம்லா.

     தற்போது 36 வயதான ஹாசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார். இதுபற்றி பேசிய ஹாசிம் ஆம்லா, தென் ஆப்பிரிக்கா அணிக்காக நான் விளையாடியது கடவுளுக்கு நன்றி. இந்த கிரிக்கெட் பயணத்தில் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டு உள்ளேன். அதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் வாழ்வில் நல்ல நண்பர்களையும் சம்பாதித்து உள்ளேன் என்று ஹாசிம் ஆம்லா கூறினார்.

Related posts

இந்த மைதானம் இவருக்கு அத்துபிடியாம்.. புட்டு புட்டு வைத்த பயிற்சியாளர்!!

TamilSportsNews

தோல்விக்கு காரணம் இதுதான். உண்மையை ஒப்புக் கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டி!!

TamilSportsNews

தோனி, கங்குலி கொடுத்த ஆதரவு அளப்பரியது… ஜாகீர்கான் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

Leave a Comment