Tennis

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரானது போட்டியானது 1877 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் இந்தத் தொடரானது பொதுவாக ஜூன் மாதக்கடைசியில் தொடங்கி ஜூலை மாதத்தில் முடிவடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடின தரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது.

இந்த ஆண்டு 134 வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் உலகினை ஆட்டிப் படைத்த நிலையில், விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!!

இந்த நிலையில் இத்தாலியின் டபிள்யூ.டி.ஏ. எனப்படும் பெண்கள் டென்னிஸ் போட்டிகள், வாஷிங்டனில் ஏ.டி.பி. எனப்படும் ஆண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்  என அனைத்தும் மீண்டும் துவங்குகிறது.

அந்தவகையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை பாரீஸ் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டியானது ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என்று நினைத்த நிலையில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு 100% அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட அளவு வழங்கப்படும் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னர்ட் குடிசெலி கூறியுள்ளார். இந்தத் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னர் மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் ஆகிய போட்டிகளும் நடக்க உள்ளன.

Related posts

10 ஆயிரம் வாக்குகளுடன் இதயம் கவர்ந்த வீராங்கனை அவார்டு வென்ற சானியா மிர்சா..!!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியது இதனால்தான்.. ஆஷ்லி பார்டி விளக்கம்!!

TamilSportsNews

துவங்கியது ஆஸ்திரேலியா ஓபன்… முதல் சுற்றில் ரோஜர் பெடரர் அசத்தல்… கிட்டியது 2 வது சுற்று வாய்ப்பு!!

TamilSportsNews

Leave a Comment