Cricket

ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு நாளை இங்கிலாந்தில் துவங்கும் கிரிக்கெட்… ரசிகர்கள் உற்சாகம்!!

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க  இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை துவங்குகிறது.

கொரோனா உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிற நிலையில், ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த மார்ச் 13 ஆம் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்தப் போட்டியானது நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இருப்பினும் ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நடைபெறுகிறது.

ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு நாளை இங்கிலாந்தில் துவங்கும் கிரிக்கெட்… ரசிகர்கள் உற்சாகம்!!

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளான சமூக இடைவெளி கடைபிடித்தல், உடலோடு உரசி மகிழ்ச்சியை கொண்டாடுதல், பந்தில் எச்சில் தேய்க்கத் தடை, கிருமி நாசினிகளை ஒவ்வொருமுறை பந்தைவீசும்போது பயன்படுத்துதல், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வீரருக்கு மாற்று வீரர் பயன்படுத்துதல் போன்றவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் முடிவினைக் கருத்தில் கொண்டே, மற்ற நாடுகளும் தங்களது கிரிக்கெட்டினைத் துவக்கும் என்று தெரிகிறது.

Related posts

இளம் வீரர்களைக் கொண்டு சாதனை… பூரிப்பில் முஷ்பிகுர் ரஹிம்!!

TamilSportsNews

டி.நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கணும்.. ஹர்பஜன் சிங் பேட்டி!!

TamilSportsNews

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!!

TamilSportsNews

Leave a Comment