Cricket

அப்ரிடி- கம்பீர் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அறிவுரை!!

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினையினைவிட, இந்தியா- பாகிஸ்தான் வீரர்களான அப்ரிடி, கவுதம் கம்பீர் இடையேயான பிரச்சினை அதை விடப் பெரியதாக உள்ளது.

இருவரும் அவரவர் நாட்டு அணிகளுக்காக ஆடியபோதுதான் பிரச்சினை என்றால், அதையும் தாண்டியதாக இப்போதைய பிரச்சினை உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தினை வெளியிட்டு இருந்தார்.

அப்ரிடி- கம்பீர் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அறிவுரை!!

அந்தப் புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறித்து வரம்பு மீறிய அளவில் “கவுதம் கம்பீருக்கு குணநலனில் கோளாறு இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் சரியில்லை” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இவர்கள் இருவருக்குமான பேச்சுகள் தீர்க்க முடியாததாகவே இருந்து வருகின்றது. இவர்கல் இருவரும் பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “அப்ரிடி மற்றும் கவுதம் கம்பீர் இடையே பிரச்சினைகள் எழுந்தவண்ணம் உள்ளன, வாக்குவாதங்கள் மிகவும் கடுமையாக இருப்பதனை தவிர்த்து புத்திசாலித்தனமாகவும், விவேகமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்வது இருவருக்குமே நல்லது.

இவர்கள் இருவரும் எங்காவது சந்தித்து பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். “ என்று கூறியுள்ளார்.

Related posts

தாறுமாறான வாழ்த்து மழை…. கங்குலி செய்த சூப்பரான விஷயம்!!!!

TamilSportsNews

ஷ்ரேயாஸ் அய்யர் செஞ்ச சாதனை… இருந்தாலும் ஹேப்பி இல்ல!!!

TamilSportsNews

குடும்பத்துடன் நேரத்தை செலவிடணும்… கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து விலகிய கிறிஸ் கெய்ல்!!

TamilSportsNews

Leave a Comment