Cricket

ரெக்கார்டு ப்ரேக்.. உலக அளவில் சாதனை செய்த கோலி!


தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் 254 ரன்கள் எடுத்தநிலையில் இருந்தார். கோலி இதன்மூலம் தன்னுடைய ஏழாவது சதத்தினைப் பதிவு செய்துள்ளார்.

துவக்கம் முதலே சீரான வேகத்தில் ஆடிய கோலி, ரன்களை எடுக்கத் துவங்கினர். இவருடைய இரட்டை சதத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

ரெக்கார்டு ப்ரேக்.. உலக அளவில் சாதனை செய்த கோலி!

இந்த சதத்தின்மூலம், இந்திய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மற்றும் முன்னாள் கேப்டன் சேவாக்கும் கூட இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்கள் அடித்து உள்ளனர்.

இந்த ஆட்டத்தின்மூலம் கோலி இவர்களின் சாதனையை முறியடித்து, ஏழு இரட்டை சதங்களுடன் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய அளவில் சச்சின், மற்றும் முன்னாள் கேப்டன் சேவாக் 6 இரட்டை சதங்களையும், ராகுல் டிராவிட் ஐந்து இரட்டை சதங்களையும், கவாஸ்கர் நான்கு இரட்டை சதங்களையும் அடித்து உள்ளனர்.

 உலக அளவினைப் பொறுத்தவரை, இரட்டை சதங்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் விராட் கோலி.

Related posts

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை அணி 4-வது வெற்றி

TamilSportsNews

சுருண்டு படுத்தாச்சு… இப்படி எல்லாம் ஆடுனா கப்பை மறந்துடுங்க…!!

TamilSportsNews

கிரிக்கெட் பயிற்சி செய்ய முடியவில்லையே.. ரோகித் சர்மா வருத்தம்!!

TamilSportsNews

Leave a Comment