Cricket

இலங்கை பிரீமியர் லீக்கில் இர்பான் பதான், மார்ட்டின் கப்தில் உட்பட 70 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!!

கொரோனா வைரஸ் காரணமாக, ஏறக்குறைய 4 மாதங்களாக விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடத்தப்பெறாததால் விளையாட்டுத் துறை பெரிய அளவில் நஷ்டத்தினை சந்தித்து வருகிறது. அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காத காரணத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இதனால் எப்படியாவது பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க வேண்டும் என்ற நோக்கில், இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்தலாம் என்ற முடிவினை எடுத்து, அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டது.

இலங்கை பிரீமியர் லீக்கில் இர்பான் பதான், மார்ட்டின் கப்தில் உட்பட 70 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!!

அதாவது இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் நடைபெறும்  கவுண்ட்டி லீக், ஐபிஎல் போட்டி மற்றும் பிக்பாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் இந்த கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவில் பணத்தினை ஈட்டி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் 2012 ஆம் ஆண்டு இதுபோல் பிரீமியர் லீக் போட்டியினை நடத்தியது.

ஆனால் அந்தப் போட்டி வரவேற்பு பெறாததால் நிறுத்தப்பட்டதை அடுத்து, தற்போது மீண்டும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை பிரிமீயர் லீக்கை வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடத்தவுள்ளது.

இந்தப் போட்டியில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இலங்கை வீரர்களுடன்,  70 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் பங்கேற்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

300 ரன்களுக்கு மேல் குவித்து விட்டால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும்… பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி நம்பிக்கை!!

TamilSportsNews

1 ரன்னில் கோட்டை விட்ட இங்கிலாந்து… அப்பாடா என பெருமூச்சு விட்ட தென்ஆப்பிரிக்கா

TamilSportsNews

கொரோனா பத்தி கவலைப்படாதீங்க… ஐபிஎல் நடக்கும்… கங்குலி பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment