Tennis

30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா சோகம்!!

கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தினார்.

இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்குடன் ஜோடியாக களம் இறங்கினார். இந்த ஆட்டத்தில் செரீனா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் மற்றும் ஆசியா முகமது இணையிடம் தோல்வியுற்றது.

30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா சோகம்!!

ஒற்றையர் சுற்றில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று செரீனா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வெற்றிக் கோப்பையினை பெரிய இடைவெளிக்கு பிறகு வென்றது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

இந்த போட்டியில் நான் ரூ.30 லட்சம் பரிசுத் தொகையாக வென்றுள்ளேன், இந்தத் தொகை முழுவதையும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் சரிசெய்ய வேண்டும். மக்கள் சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

தோனியுடன் மதிய உணவு சாப்பிட ஆசை… சானியா ஓப்பன் டாக்!!

TamilSportsNews

விலை உயர்ந்த ஷூவை பரிசளித்த பரினீத்தி சோப்ரா… நன்றி சொன்ன சானியா!!

TamilSportsNews

ஆக்ரோஷமான ஆட்டம்.. வலுவான அந்த வீரர்கள்.. இறுதிப் போட்டிக்குள் டொமினிக் தீம்

TamilSportsNews

Leave a Comment