Cricket

25 வது திருமணநாள்: மனைவிக்கு சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ!!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார், கொரோனா தாண்டவமாடும் இக்காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகள் சமைத்த ரெசிப்பி போட்டோவினை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்தநிலையில் கடந்தவாரம், சச்சின் தனது மகன் அர்ஜூனுக்கு முடி வெட்டியுள்ளார். அந்த புகைப்படத்தினை இன்ஸ்டாவில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

25 வது திருமணநாள்: மனைவிக்கு சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ!!


அந்தவகையில் தற்போது அவர் தனது திருமணநாளையொட்டி மனைவிக்காக ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதாக ஒரு வீடியோவினைப் பதிவிட, அதுவும், வைரலாகிப் போயுள்ளது. அதாவது சர்ப்ரைஸாக  மாம்பழ குல்பியை தயாரித்துள்ளார்.

குல்பி வீடியோவினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதோடு, அவர் கூறும்போது, “இன்று எங்கள் 25 வது திருமண நாள். நான் என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளேன். எனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்தவர் என் அம்மாதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சினின் இந்த வீடியோ விறுவிறுவென வைரலானதுடன், இவருக்கு ரசிகர்களும், இந்திய அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

Related posts

பயமா இருக்கு… ப்ரே பண்ணிக்கோங்க… ட்வீட் போட்ட முஷ்டாபிஜூர் ரஹ்மான்!!

TamilSportsNews

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்… கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் வலியுறுத்தல்!!

TamilSportsNews

கோலிதாங்க பெஸ்ட், மத்த எல்லாரும் வேஸ்ட்… மனம் திறந்த ரவி சாஸ்திரி!

TamilSportsNews

Leave a Comment